Thursday, 7 February 2013

                                              கேசரி


தேவையான பொருட்கள் :


  • ரவை ,
  • சர்க்கரை,
  • ஏலக்காய் பொடி,
  • கேசரி கலர் ,
  • முந்திரி திராட்சை,
  • நெய் .

செய்முறை :


வாணலி சூடானதும் ரவையை முதலில் தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிது நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அடுத்து அதே வாணலியில் (ஒரு காப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர்) தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ரவையை சேர்த்து ...விடாமல் கிளறவும்.
ரவை வெந்ததும் சர்க்கரை (ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் சர்க்கரை) சேர்த்து விடாமல் கிளற வேண்டும்.கிளறும்போது தேவையான அளவு நெய் சேர்த்துக்கொள்ளவும்.
பதம் வந்ததும் கேசரி கலரை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கலவையில் சேர்க்கவும் ,
பின்னர் ஏலக்காய் பொடி வறுத்து வைத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்பு : அதிகம் தண்ணீர் சேர்த்து ரவையை குழைய விட்டால் கேசரி சுவையாக இருக்காது .

5 comments:

  1. பார்க்க நல்லா இருக்குது. பயனுள்ளதாக இருந்ததானு கேட்ட ஓட்டுப்பெட்டியில் இல்லைனு ஓட்டுப் போட்டுட்டேன். சாப்பிட்டாதான பயன். பார்க்கிறதால பயனில்லைல. அதான். :-)

    ReplyDelete
    Replies
    1. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

      Delete
    2. Yeah i tried enne Sugar ku bathila salt pottutten... bow aayiduchi.. lolz.. ungaloda own dish aah ithe?

      Delete