Tuesday, 12 February 2013

                                                    ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் 


சிட் வீச்சு மற்றும் வன்கொடுமைகளுக்குள்ளாகி உயிரிழந்த பெண்களுக்காக அறச்சீற்றம் செய்ததை  பார்த்து சந்தோஷப்பட்டாலும் உண்மையான அடக்குமுறை பெண்கள் மீதான வன்மம் எங்கிருந்து வருதுன்னு யாரும் யோசிக்கிராப்புல தெரியல.அப்படி பட்ட வன்மங்களை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளாத சமூகத்தில் இன்னும் பல அப்பாவி பெண்களை பலிக் கொடுக்கத்தான் போறோம்.

காதலை மறுத்து ஆசிட் வீச்சுக்குள்ளாவது ஒருப்பக்கம் இருக்கட்டும்(இதை ஏன் ஒரு பக்கம் வைக்கிறேன்னா இதை எல்லாரும் தவறுன்னு ஒத்துப்போயாச்சு).

எல்லா ஆண்களும் இல்லை அதிகம் நம் கண்ணில் படக்கூடிய விஷயத்தையே உதாரணத்திற்கு எடுத்துப்போம்.

ஒண்ணுமில்லை ,தெரிந்த பெண் தன்னிடம் பேசாமல் இன்னொரு ஆணிடம் பேசினா அந்த பெண்ணை விட்டு அமைதியா ஒதுங்கி போற ஆண்கள் எத்துனை பேர் இருப்பாங்க?அப்படியும் மீறி அந்த பெண் பேசி சிரிச்சி சந்தோஷமா இருந்தா அந்த ஆண் எப்படிலாம் பழித்தீர்ப்பான்னு யோசித்துப் பாருங்க.அந்த பெண்னைப் பற்றி குறைந்தது அவள் கற்பை சந்தேகித்தாவது வெளில பேசமாட்டான்?(இதெல்லாமே பெரும்பாலும் சேர்த்துக்கோங்க).அப்பறோம் தனக்கு ஒத்தே வரமாட்டான்னு ஒரேடியா தெரிஞ்சா எண்ணலாம் செய்வான்? அந்த பெண்ணுடைய அலைபேசிக்கு மொட்டை அழைப்புகளும் ஆபாச குறுஞ்செய்திகளும் அனுப்புவான் (லேட்லைன் இருந்த காலத்துலயே பல பெண்கள் அனுபவிக்கிற கொடுமை மொட்டை அழைப்புகள்)
அப்படியும் இல்லாட்டி அவ இவன்னு கேவலமான சொல்லாடல் ...எங்கே இருக்கு பெண்ணுக்கான கண்ணியம் இங்க?
 
பிடிக்காட்டி ஒதுங்கி ஓடி ஒளியிர எத்தனை பெண்களை அமைதியா விட்டு ஒதுங்கி போயிருக்காங்க சில ஆண்கள்?
 
பெண்கள் வீட்டுக்குள் சிறைப்படுவது தானே உங்களுக்கெல்லாம் ஒரே நோக்கம்?
கேட்டுக்கோங்க வீட்டுக்குள் சிறைப்பட்ட காலங்களிலும் எவ்வளவோ கொடுமைகளை அநியாயத்துக்கு அனுபவித்தவர்கள் தான் பெண்கள்.

பெண்ணியம் பேசுறதே உங்களுக்கெல்லாம் எரிச்சலான விஷயமா இருக்குல்ல?
தினம் தினம் எவ்வளவு வக்கிரங்களையும் கொடுமைகளையும் பேச்சுகளையும் சீண்டல்களையும் பார்க்கிற அனுபவிக்கிற ,சக தோழிகளிடம் கேட்டு தெரிஞ்சிக்கிற பெண்களுக்கு எப்படி இருக்கும்?
உங்க வீட்டு பொண்ணுங்க மாதிரி என்னைக்காவது அடுத்தவன் வீட்டு பெண்ணை பார்த்திருக்கீங்களா?
அவ்வளவு பாசம்மெல்லாம் வேணாம் குறைந்த பட்சம் சீண்டாமல் போனதுண்டா?
(உங்க வீட்டு பெண்ன்னு கேட்டா மனைவியாவான்னு கேட்பாங்க அதுக்கான பதில் உங்க வீட்ல இருக்க அக்கா தங்கை அம்மா எல்லாரையும் மனைவியாத் தான் பார்ப்பீங்களா?)

சக ஆண் நண்பர்களை கீறாமல் தன்மையாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்ந்து முடிச்சிடுறாங்க.யாருக்கும் தீமை செய்யவும் யோசிக்ககூட மாட்டாங்க அவங்களுக்கான சிறிய வட்டத்துல அழகாகவே வாழ்ந்து முடிச்சிடுறாங்க.
ஏன் இந்த குறைந்தபட்ச நாகரீகம் கூட ஆண்களுக்கு இருப்பதில்லை இப்படி பட்ட குரூர அநாகரீகமான செயல்கள் தான் பூதாகரமா சில சமயம் வெளிப்படுது.இன்னைக்கு நீங்க சக பெண் நண்பர்களுக்கு செய்யும் அதே கொடுமைகள் தான் அடுத்த தலைமுறையினர் உங்க மகள்களுக்கும் மருமகள்களுக்கும் செய்வாங்க.
ஏன் ஆண்கள் நினைத்த எல்லாத்தையும் எழுத இடமுண்டு அநாகரீகமான வக்கிரங்களும் சேர்த்து ஆனால் பெண் தன் தேவைகளைக் கூட மனம் திறந்து எழுதிற முடியாது.
தயவு செய்து பெண்களை மதித்து கொண்டாடவெல்லாம் வேண்டாம் சாமிகளா அதே போல தூக்கி போட்டு மிதிக்கவும் வேண்டாம்.பெண்களுக்குள்ளும் நன்மை தீமை உண்டு இல்லைங்கல ஆனா அதுக்காக ஆண்களுக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்குறதில்லை. இது போன்ற சின்ன சின்ன மாற்றங்களைசெய்தாலே போரும் மத்த விஷயங்கள் எல்லாம் தன்னால மாறும்.
 
எவ்வளவோ இருக்கு பேச கேள்வி கேட்க ....கடைசியா ஒன்னே ஒன்னு - ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாகவே இருக்கு பல விஷயங்கள் !!!

Thursday, 7 February 2013

                                              கேசரி


தேவையான பொருட்கள் :


  • ரவை ,
  • சர்க்கரை,
  • ஏலக்காய் பொடி,
  • கேசரி கலர் ,
  • முந்திரி திராட்சை,
  • நெய் .

செய்முறை :


வாணலி சூடானதும் ரவையை முதலில் தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிது நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அடுத்து அதே வாணலியில் (ஒரு காப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர்) தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ரவையை சேர்த்து ...விடாமல் கிளறவும்.
ரவை வெந்ததும் சர்க்கரை (ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் சர்க்கரை) சேர்த்து விடாமல் கிளற வேண்டும்.கிளறும்போது தேவையான அளவு நெய் சேர்த்துக்கொள்ளவும்.
பதம் வந்ததும் கேசரி கலரை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கலவையில் சேர்க்கவும் ,
பின்னர் ஏலக்காய் பொடி வறுத்து வைத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்பு : அதிகம் தண்ணீர் சேர்த்து ரவையை குழைய விட்டால் கேசரி சுவையாக இருக்காது .